சோற்று கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த வரம் இயற்கையாகவே வளரும் கற்றாழையில் பல மருத்துவ குனங்கள் இருக்கின்றன இன்றைய நாகரிக உலகத்தில் cosmetics பொருட்களிலும் சரி மருத்துவ பொருட்களிலும் சரி கற்றாழை மிகவும் பயனபடுத்தப்படுகன்றன.

1 சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதா கதிர்கள் அதீத அளவில் நமது தோலில் பட்டுக் கோண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்மந்தமான வியாதிகள் மற்றும் தோல் புற்று ஏற்படுவதர்கு வாய்ப்பு ஏற்படுகின்றது கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கோடைகாலங்களில் நமது மேல் தோலில் பூசிக்கொண்டால் சரும நோய்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

2 கற்றாழை எண்ணெய் அல்லது கற்றாழை தண்டுகளில் இருந்து கிடைக்கும் ஜெல் போன்ற படலத்தை புண்கள் மீது தடவி வருவதால் புண்கள் சீக்கரம் ஆருவதோடு மட்டும் அல்லாமல் தழும்புகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

3 பெண்கள் அனைவருமே தங்களின் முகத்தோற்றம் பொளிவுடன் இருக்க இன்றைய காலத்தில் தீமை உண்டாக்கும் ரசாயனங்கள்அதிகம் உள்ள பொருட்களை பயன்படுத்துகின்றன தினமும் கலை மற்றும் மாலை நேரங்களில் தோல் நீக்கிய கற்றாலழை தண்டுகளை நன்கு அரைத்து முகம் முழுவதும் பூசுக்கொண்டு 10 நிமிடம் அல்லது 30 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெரும் அதோடு முகத்தில் இருக்கும கரும்புள்ளிகள் நீங்கும்.

4 தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெரும் பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிறுமிகளை ஆழிக்கும்.

5 தினசரி சரியாக மலம் கழிப்பவர்களுக்கு உடலில் நோய்கள் ஏற்படாது என்பது மருத்துவ ரீதியான உண்மை ஆனால் இன்று பலருக்கும் தவறான உணவு முறை மற்றும் வாழ்ககை முறையால் மலச்சிக்கல் ஏற்பட்டு அவர்களை பாடாய் படுத்துகிரது தினமும் காலையில் சிறிதளவு தோழ் நீக்கிய கற்றாழையை ஜூஸ் செய்தொ அல்லது அப்படியே மென்று வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும் அதோடு வயிறு குடல் போன்ற ஜீரன உருப்புகளின் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்

6 கற்றாழை பல்லாண்டுகளாகவே சிறந்த மருத்துவ மூளிகையாக நமது சித்த ஆயுர்வேத மருத்துவத்திள் பயன்படுத்தப்பட்டு வருகிரது கற்றாழையில் இருக்கும் சில பேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்களை செயலிழக்க செய்யும் தன்மை கொண்டதாகும் கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் அனைத்து உருப்புகளிலும் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேரி உடல் நலத்தை மேம்படுத்தும்.

7 கற்றாழை தண்டுகளின் தோல் நீக்கி ஜூஸ் தயாரித்து அதில் சிறிதளவு சக்கரை சேர்தது சாப்பிடுவதால் உடல் வெப்பம் தனியும் சிலருக்கு கோடை காலங்களில் ஏற்படும் நீர் சுருக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரும்.

8 அமேரிக்க நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் படி கற்றாழை தண்டுகளை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது சாப்பிட்டு வந்ததில் அவர்களின் இரத்தத்தில் இருக்கும் சக்கரையின் அளவு கனிசமாக குறைந்திருப்பதாக கண்டரிந்துள்ளணர். நமது நாட்டில் நெடுங்காலமாகவே நீரிழிவு நோய்ககு கற்றாழை மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுருத்தப்பட்டுள்ளது.

9 மணிதர்களுக்கு பல காரணங்களால் அவர்களின் உடலில் உண்டாகும் புற்றுநோய் செல்கள் மீண்டும் மீண்டும் வளரக்கூடயவை இத்தகைய தீமையான செல்களை அழித்து அரோக்கியமான செல்களை உடலில் வளர்சசி பெற செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. எனவே புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும் புற்று நோயால் பதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாக பயன்படுத்தி வருவது நல்லது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top