இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்….!

முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு.
கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும். கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும்.

மஞ்சளில் இரு வகைகளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.

உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.

கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும். பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.

முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும். வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top