முட்டையில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்று அனைவருக்கும் தெரிந்ததே, அந்த வகையில் காடை முட்டைகளில் கோழி முட்டையைகாட்டிலும் அதிக சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. இதில் உயர்தரமான வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் B1, வைட்டமின் B12, போலிக் அமிலம், ஒமேமா 3 கொழுப்பு அமிழம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம் போன்ற அத்தியவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இச்சத்துக்கள் அனைத்தும் கோழி முட்டையை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக காடை முட்டையில் உள்ளது இத்தனை சத்துக்கள் நிரைந்த காடை முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் அற்புதமான நண்மைகள்.
01. காடை முட்டையில் நிறைந்திருக்கும் கால்ணியம் வைட்டமின D போன்றவை எலும்பு மூட்டுகளை பலப்படுத்த உதவும் எலும்பு மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
02. தினமும் வேகவைத்த காடை முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் காடை முட்டையில் நிறைந்திருக்கும் தரமான புரதச்சத்தை உடல் எளிதாக உறிஞ்சிசக் கொள்கிறது இதனால் புரத குறைபாட்டை சரி செய்யலாம்.
03. காடை முட்டையை சாப்பிடுவதனால் நமது உடம்பில் ஏற்படக்கூடிய அலர்ஜி ஒவ்வாமை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது, சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும், சரும செல்களை புதுப்பிக்க உதவும், காடை முட்டையை அடிக்கடி சாப்புடிபவர்களுக்கு சருமம் விரைவில் முதிர்சசி அடைவதை தடுக்கும்.
04. மூளையின் செயல்பாட்டை தூண்டும் காடை முட்டையில் வைட்டமின் அதிகம் இருப்பதால் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மூளை செயல்பாடு அதிகரிக்கும், ஞாபக மறதி அல்சைமர் நோய் கள் வராமல் தடுக்கும், குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் புத்தி கூர்மை நினைவாற்றல் திறன் அதிகரிக்கும்.
05. காடை முட்டையில் வைட்டமின் A நிறைந்துள்ளது. காடை முட்டையை தினமும் சாப்பிட்டால் கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும், குழந்தைகளுக்கு சிறு வயது முதல் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் கண் பார்வை குறைபாடு கண்புரை நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
06. காடை முட்டையில் உள்ள வைட்டமின் B12 இரும்பு சத்து போன்றவை ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும். ரத்த சோகை இருப்பவர்கள் மற்ற உணவுகள் மட்டும் இன்றி காடை முட்டையை தினசரி சாப்பிட்டு வந்தால் ரத்த சோகையை குறைக்க முடியும்.
07. காடை முட்டையில் உள்ள புரதச்சத்துக்கள் வைட்டமின்கள் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நரம்பு மண்டலங்கள் செயல்பாட்டினை அதிகரிப்பற்கும் உதவுகிறது.
08. பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் 2 அல்லது 3 காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் வளரும் கிழந்தையின் மூளை எலும்பு மண்டலம் வலுவாக இருப்பதற்கு உதவும்.
09. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும்.
இத்தனை நண்மைகளை தரும் காடை முட்டையை இதயப்பாதிப்பு இருப்பவரகள் அவ்வப்போது சாப்பிடலாம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.