சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் போன்ற நமது பாரம்பரிய மருத்துவத்தில் நோய்களை தீர்ககும் முக்கிய பொருளாக இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி செரிமான மண்டலத்துக்கு சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் மூலிகை பொருள் என்பது அறிந்த விசயமே ஆனால் இஞ்சியை தொடர்ந்து சாப்பிடுவதனால் இன்னும் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய முடியும் இஞ்சியை பொடியாக நருக்கி தேனில் ஊரவைத்து தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம், அல்லது இஞ்சி சாறு 1 தேக்கரண்டி எடுத்து அதனுடன் சம அளவு தேன் களந்து பருகலாம், அல்லது இஞ்சியை தட்டி கொதிக்க வைத்து அருந்தி வரலாம் இவ்வாறு ஏதாவது ஒரு வடிவில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நண்மைகள்.
01. இஞ்சியை தனமும் சாப்பிட்டு வரும்பொழுது சாதாரன தலைவலி குமுட்டல் பிரச்சினை தீரும்.
02. காய்சசல் அல்லது வேறு எதேனும் நோய் தொற்றுக்களால் பாதிக்கப்படும் பொழுது உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைபாடு இருந்தால் அதை சரி செய்யும் குணங்கள் இஞ்சிக்கு உள்ளது.
03. கருப்பையில் கட்டி உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளில் இஞ்சியும் ஒன்று இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் கருப்பையில் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கிறது கருப்பை கட்டி இருந்தால் அதனை குறைக்க உதவும், மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்து சுழற்சியை மேம்படுத்தும்.
04. புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது இஞ்சி தொடர்நது உட்கொண்டு வரும் பொழுது நுரையீரல், கருப்பை, மார்பகம் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
05. இஞ்சியை தொடர்நது சாப்பிட்டு வரும் பொழுது ரத்தத்தில் உள்ள நச்சுக்கல் கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்கிறது ரத்தத்தின் கட்டித்தன்மையை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
06. இஞ்சி சாற்றினை தலையில் தேய்த்து மசாஜ் செய்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சினை தலை அறிப்பு அதனால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சினைகளை சரி செய்யும்.
07. இஞ்சி உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது இதனால் உடல் எடை குறைவது மட்டுமின்றி இதய குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.
08. மூட்டு வலி மூட்டு வீக்கம் போன்ற பாதிப்பகளுக்கு இஞ்சி சாறு மற்றும் இஞ்சி தைலம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இஞ்சி சாறு அல்லது இஞ்சி தைலத்தினை மூட்டு வலி, வீக்கம் இருக்கும் இடங்களில் தொடர்நது தடவி வரும் பொழுது அதன் பாதிப்புகள் சரியாகும்.
09. உயர் ரத்த அழுத்த பாதிப்புகளுக்கு இஞ்சி சிறந்த உணவுப்பொருள ஆகும்.
10. இஞ்சியில் இருக்கும் காரத்தன்மையும் இயற்கையான பேதிப்பொருட்களும் உடலில் இருக்கும் கிருமிகளை அழித்து ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும். பித்தம் தொடர்பான குமட்டல் வாந்தி போன்ற நோய்களுக்கு இஞ்சி மிகுந்த பலன் தரும்.