மருத்துவ பயன்கள் நிறைந்த மருதம் பட்டை

இதய நோய்கள் முதல் உடலில் தோன்றும் பல பாதிப்புகளை எளிதாக குணமாக்கும் அறிய மருத்துவ குணங்கள் நிறைந்த மருதம் பட்டையின் எண்ணில் அடங்காத நண்மைகள் உண்டு மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டையை பொடியாக செய்து தேநீர் வைத்து அருந்தி வரும் பொழுது உடலில் பல நோய்கள் குணமடையும்.

மருதம் பட்டை துவர்பபு சுவை கொண்டது வைட்டமின்C அதிகம் நிறைந்தது coenzyme என்று அழைக்கப்படும் இயற்கையாக நமது உடலில் சுரக்கும் நொதிகள் பற்றாக்குறை ஏற்படும் பொழுது மாரடைப்பு, இதயநோய்கள், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மருதம் பட்டையில் மட்டும் இந்த coenzyme இயற்கையாகவே மிகுதியாக நிறைந்துள்ளது எந்த உணவிலும் இதில் இருக்கும் அளவிற்கு coenzyme நொதிகள் இருப்பதில்லை ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய coenzyme மருதம் பட்டையில் மட்டும் கிடைத்து விடும். மருதம் பட்டையில் உள்ள மருத்துவ குணம் இதய அடைப்பு, திடீர் மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்யும்.


மருதம் பட்டை பொடி தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் 1/2 தேக்கரண்டி அளவு வெண்தாமரை பொடி, ஜீரகம் 1 கரண்டி சிறிதளவு சுக்கு சேர்தது நன்கு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் தேன் அல்லது பனை வெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வந்தால் மன அழுத்தம, தூக்கமினமை, மாரடைப்பு, இதயம் படபடப்பு, இதய குழாய்களில் அடைப்பு போன்ற இதய நோய்கள் குணமாகிவிடும். சர்ககரை நோயாளிகள் தேன் சேர்க்காமல் அருந்தி வரலாம்.

மருதம் பட்டை தேநீரை தொடர்ந்து அருந்தி வரும் பொழுது அதில் உள்ள துவர்பபு சுவை வயிற்று புண்களை குணமாக்கும். உணவு ஒவ்வாமை அஜீரனம் போன்றவற்றால் ஏற்படும் வயிற்றுபபோக்கிற்கு 5gram மருதம் பட்டையை ஒரு டமலர் மோரில் கலந்து அருந்தி வந்தால் குனம் கிடைக்கும்.

5 gram மருதம் பட்டையில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது இருமல், சளி, ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

வாய்பபுண் உள்ளவர்கள் சிறிதளவு மருதம் பட்டை பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்பபுண் குணமாகும்.

பல் ஈருகளில் ஏற்படும் ரத்த கசிவு போன்றவற்றுக்கு மருதம் பட்டை பொடியால் தொடர்ந்து பல் தேய்த்து வந்தால் படிப்படியாக குணம் கிடைக்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top