அகத்தி பூ பயன்கள்

அகத்தி கீரையை போன்றே அகத்தி பூக்களிலும் பலவேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அகத்தி பூக்களில் வெள்ளை மற்றும் சிவப்பு நிரத்தில் என இரு வகை பூக்கள் உள்ளது இரண்டுமே மருத்துவ குணங்கள் நிரைந்தவை அகத்தி பூக்களில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின், தாது உப்புக்கள் போன்ற பல உயர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

அகத்தி பூக்களை வாரம் ஒரு முறை உணவில் சேரத்துக்கொண்டால் பல வகையான நோய்களை குணப்படுத்த முடியம்.

உடல் சூடு மற்றும் பித்தம் தொடர்பான நோய்களை தீர்கும் மருத்துவ குணங்கள் அகத்தி பூக்களில் நிறைந்துள்ளது அதற்கு அகத்தி பூக்களை சமையலில் சேர்தது வந்தாலே போதும் பித்தம் குறைந்து உடல் குளிர்சசி அடையும்.

இரைப்பை புண் மற்றும் குடல் புண் இருப்பவர்களுக்கு அகத்தி பூ சிறந்தது. அல்சர் பிரச்சினை இருப்பவர்கள் அகத்தி பூவை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

ரத்த அழுத்தம் இதயபலவீனம் படபடப்பு பதற்றம் போன்ற பாதிப்புள் இருப்பவர்கள் அகத்தி பூக்களை உணவில் சேர்தது வந்தால் கட்டுப்படும்.

இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அகத்தி கீரையும் வாரத்துக்க ஒரு முறை அகத்தி பூக்களையும் சமைத்து உண்பவர்களுக்கு கண் எறிச்சல் கண் அறிப்பு நீங்கும் கண் பாரவை தெளிவடையும்.

செவ்வெகத்தி பூக்களுக்கு ரத்த சோகையை குணப்படுத்தும் தன்மை நிறைந்துள்ளது இதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து உடல் வலி உடல் சோர்வை நீக்கி உடலை வலுப்படுத்தும்.

புற்று நோய் செல்கள் பெருகுவதை கட்டுப்படுத்தும் தன்மையும் பெக்டீரியா வைரஸ் போன்ற கிறுமி தொற்றுக்கு எதிராக நோய் எதிர்பபு சக்தியை வலுப்படுத்தும் தன்மையும் இப்பூக்களுக்கு உள்ளது். அகத்தி பூக்களை உணவுல் சேர்த்து கோள்வது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top