உடலில் உள்ள ரத்த குழாய்களில் ஓடும் ரத்தம் ஆனது இதயத்திற்கு வரும் பொழுது குறிப்பிட்ட வேகத்திலும் வெளியேறும் பொழுது வேறு வேகத்திலும் செல்கிறது பொதுவாக ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120 அளவில் இருந்தால் அது சராசரி ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது இந்த அளவிற்கு மேல் உயரும் பொழுது உயர் ரத்த அழுத்தமாக கருதப்படுகிறது.
ரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்தி சீராக வைப்பதில் இதயம், சிறுநீரகங்கள், மூலை, நரம்பு மண்டலம் ஆகிய முக்கிய பங்கு வகிக்கின்றன இந்த உருப்புகளல் எதேனும் பாதிப்புகள் ஏற்படும் பொழுது ரத்த அழுத்தம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
ரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும் மகிழ்சசி, கவலை, கோபம், பயம், அதிரச்சி, உடல் பயிர்ச்சி போன்ற சூழ்நிலைக்கு தகுந்தவாறு ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவொ குறைவாகவொ இருக்கலாம் இது தற்காலிகமானதுதான். நாம் இயல்பான நிலையில் உள்ள போது இருக்கும் ரத்த அழுத்தத்தை தான் கணக்கிட வேண்டும்.
பொதுவாக ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டு அதற்கு தகுந்த வாறு சிகிச்சை எடுத்தால் பெறிய ஆபத்துக்கள் எதிர்காளத்தில் வராமல் தடுக்கலாம்.
ஒருவருக்கு முதல் முறையாக ரத்த அழுத்தத்தை அளக்கும் பொழுது ஒரே அவரை முறை மட்டும் அளந்து விட்டு அவருக்கு உயர் ரத்த அழுத்தம் என்று முடிவு செய்வது தவறு தொடரந்து சில நாட்களுக்கு நானகு அல்லது ஐந்து முறை இயல்பான நிலையில் இருக்கும் பொழுது ரத்த அழுத்தத்தை கணக்கிட்டு தீர்மானிப்பதே உண்மையான ரத்த அழுத்த நிலையாகும்.
ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது அடிக்கடி தலைவலி, தலைசுற்று, மயக்கம், வாந்தி, சாதாரணமாக நடக்கும் பொழுது மூச்சு வாங்குதல், கால் வீக்கம், களைப்பு, படபடப்பு போன்றவை ஏற்படலாம் அனால் பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரிவதில்லை.
உயர் ரத்த அழுத்தமாக இருந்து எந்த ஒரு சிகிச்சையும் எடுக்காத பட்சத்தில் அது படிப்படியாக உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் இதனால் திடீரென மயக்கம், பக்க வாதம், மாரடைப்பு, மூலை இரத்த கசிவு, நரம்புகள் பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்பபு உள்ளது. உயர் ரத்த அழுத்தம் இருக்கும் பொழுது தகுந்த சிகிச்சை எடுத்து கொண்டு ரத்த அழுத்தத்தை சீராக பராமரித்தால் பெறிய ஆபத்துக்கள் முன்கூட்டியே வராமல் தடுக்க முடியும்.