நாம் சாப்பிட்டவுடன் சில சமயம் வயிற்று வலி அஜீரனம் வாய்வு தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் ஒருவருக்கு ஒத்துக்கொள்ளும் உணவு இன்னொருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அது அவர் அவர் உடல் தன்மையை பொருத்தது ஆனால் எந்த உணவு ஒவ்வாமையை அலரஜியை ஏற்படுத்துகிறதொ அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஒரு சில உணவுகளை சமைக்கும் பொழுது சில பொருட்களையும் சேர்த்து சமைத்தால் அவற்றால் ஏற்படும் குற்றங்களை தடுக்க முடியும்.
01. நாம் பருப்பு வகை உணவுகளை சமைத்து உட்கொள்ளும் பொழுது அதில் நிரைந்திருக்கும் குணங்களால் ஓரு சிலருக்கு வாய்வு பிரச்சினை வயிற்று பொருமலை உண்டாக்கும் ஆனால் அவற்றை தவிப்பதற்கு பருப்பு வகைகளை வேகவைக்கும் பொழுது பூண்டு, பெருங்காயம், விளக்கெண்ணெய் போன்றவற்றை சேர்த்தால் வாய்வு பிரச்சினை வயிற்று வலி வராமல் தடுக்கலாம்.
02. கார சுவை உணவுகளை சமைக்கும் பொழுது வெந்தயம் சேர்ப்து சிறந்தது வெந்தயம் குளிர்சசி தன்மை கொண்டது வயிரு எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க கூடியது அதனால்தான் புளிகுழம்பு ஊறுகா போன்றவற்றை சமைக்கும் பொழுது வெந்தயம் சேர்ககப்படுகிறது.
03. கிழங்கு வகைகளை சமைக்கும் பொழுது பூண்டு, இஞ்சி சேர்ததுக் கொள்வது நல்லது ஏனனில் இவை செரிமானத்தை தூண்டி வய்வு தொல்லை அஜீரனம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. உருளை கிழங்கு, சர்ககரை வள்ளி கிழங்கு வகைகளை சமைக்கும் பொழுது பூண்டு இஞ்சி சேரத்துக்கொள்வது நல்லது.
04. உணவில் உள்ள விசத்தன்மை நச்சுக்களை நீக்க மிளகு பயன்படுகிறது கார சுவைக்காக மிளகாய் பயன்படுத்துவதை விட மிளகு சேர்ததுக்கொள்வது நல்லது. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளும் நச்சுத்தன்மையும் நீங்கிவிடும் செரிமான கோளாறுகளை தடுக்கும்.
05. இனிப்பு பலகாரங்கள் செய்யும் பொழுது ஏலக்காய் சேர்த்துக்கொள்வதன் மூலம் அஜீரனம், பசியின்மை, மந்தம், செரிமானம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
06. அசைவ உணவுகளை சமைக்கும் பொழுது சீரகம், சோம்பு, இஞ்சி போன்ற பொருட்களை சேர்க்க வேண்டும் இப்பொருடகளை சேர்ககும் பொழுது உட்கொள்ளும் உணவு செரிமானமாக உதவுகிறது.
பொதுவாக எந்த உணவு உட்கொண்டாலும் அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் நன்கு பசி எடுத்தவுடன் சாப்பிடுவதும் உமில் நீருடன் நன்கு மென்று விழுங்குவதும் நல்லது. என்னதான் சுவையான உணவாக இருந்தாலும் கூட அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது அதுவே நஞ்சாக மாறிவிடும் அதனால் உணவை நண்கு பசி எடுத்த பிறகு நிதானமாக மென்று அளவுடன் சாப்பிட்டால் நோயின்றி வாழ முடியும்.